×

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்

சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’, மணிரத்னம் டைரக்‌ஷனில் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ ஆகிய படங்களில் நடித்துள்ள விக்ரம், தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். ‘சீயான் 61’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கே.ஈ.ஞானவேல் ராஜா, பா.ரஞ்சித் தயாரிக்கின்றனர். தமிழ் பிரபா கதை, திரைக்கதை எழுதுகிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். கபிலன், அறிவு, உமா தேவி பாடல்கள் எழுதுகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் நேற்று சென்னையில் தொடங்கியது.

Tags : Vikram ,B. Ranjith , Vikram directed by B. Ranjith
× RELATED நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி என...