உலக கோப்பை துப்பாக்கிசுடுதல்: தங்கம் வென்றார் தோமர்

சாங்வோன்: ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தொடரின் ஆண்கள் 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) பிரிவில், இந்திய வீரர் ஐஷ்வரி பிரதாப் சிங் தோமர் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். தென் கொரியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில், 50 மீட்டர் ரைபிள் பிரிவு பைனலில் ஹங்கேரியின் ஸலன் பெக்லருடன் நேற்று மோதிய நடப்பு ஜூனியர் உலக சாம்பியனான தோமர் (21 வயது, மத்தியபிரதேசம்) 16-12 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். முன்னதாக நடந்த தகுதிச் சுற்றிலும் அபாரமாக செயல்பட்ட அவர் 593 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

3 நிலை: இந்த ரைபிள் போட்டியில் வீரர்கள் படுத்தபடி, முட்டிபோட்டு மற்றும் நின்றபடி என மூன்று நிலைகளில் இலக்கை குறி பார்த்து சுட வேண்டும்.

Related Stories: