பாலியல் பலாத்கார வழக்கு; ஆகஸ்ட் 10ம் தேதி ஆஜராக சிவசங்கர் பாபாவுக்கு உத்தரவு

செங்கல்பட்டு: பாலியல் பலாத்கார வழக்கில் ஆகஸ்ட் 10ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியின் நிறுவனரும், பிரபல சாமியாருமான சிவசங்கர் பாபா மீது 6 போக்சோ வழக்கு உள்ளிட்ட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சிவசங்கர் பாபா, ஜாமீனில் வெளியே வந்தார். ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட முதல் போக்சோ வழக்கின் விசாரணைக்காக நேற்று  செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜரானார். அவரிடம் நீதிபதி தமிழரசி விசாரணை நடத்தினார். இதையடுத்து, ஆகஸ்ட் 10ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று சிவசங்கர் பாபாவுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: