×

ஆந்திரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் தண்ணீரில் முழ்கி தத்தளிப்பு: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் ஆய்வு

அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் கோதாவரி, கிருஷ்ணா நதி,  ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் தண்ணீரில் முழ்கி தத்தளிக்கின்றனர். கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில்  கனமழை காரணமாக கோதாவரி, கிருஷ்ணா நதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக  நதிகரைகளை ஒட்டியுள்ள பல கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. தொடர்ந்து கோதாவரியில் 70 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளநீர் ஆர்ப்பரித்து செல்கிறது. வெள்ளத்தில் சிக்கிய குடும்பங்களை மீட்க ஆந்திர அரசு தூரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் வெள்ள நிவாரண நடவடிக்கை குறித்து முதல்வர் ஜெகன் மோகன் மூத்த அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். ஹெலிகாப்டர் மூலம் வான்வெளி ஆய்வுக்கு பிறகு வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் கலெக்டர்கள்,எஸ்பிக்களுடன் அவர் பேசினார். தகவல் தொடர்பு அமைப்பில் தடங்கள் இல்லாமல் இருக்க செல்போன் டவர்களுக்கு டீசல் சப்ளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே நிவாரண பணிகளை முடக்கி வைத்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 கிலோ அரிசி, பருப்பு, பாமாயில், காய்கறிகள் மற்றும் பால் வழங்க உத்தரவிட்டார். இவற்றை 48 மணிநேரத்திற்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கோதாவரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஹெலிகாப்டரில் சென்று வான்வெளி ஆய்வு செய்யுமாறு ஐந்து மாவட்ட கலெட்டர்களை முதல்வர் ஜெகன்மோகன் அறிவுறுத்தியுள்ளார். கிருஷ்ணா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் நீர்தேக்கத்தில் நீர்பரப்பு அதிகரித்துள்ளது. அணையின் முழு நீர்மட்டம் 885 அடியாக உள்ள நிலையில் தற்போது 848.30 அடியாக  நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அங்கிருந்து கண்டலேறு அணைக்கு நீர் திருப்பி விடப்பட்டு அணையின் நீர் நிரம்புவதை குறித்து சென்னைக்கு தண்ணீர் திறக்க ஆந்திரா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags : Andhra ,Chief Minister ,Jagan Mohan Reddy , Many villages submerged in water due to floods in Andhra state: Chief Minister Jagan Mohan Reddy inspects by helicopter
× RELATED ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி,...