ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா அறிகுறி... உடல்நிலை சீராக உள்ளது : மருத்துவமனை அறிக்கை

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.அதிமுக பன்னீர்செல்வம் அணியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேற்று பிற்பகலில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உடல் நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் லேசான கொரோனா அறிகுறிகளுடன் 15ம் தேதி தனிப்படுத்துதல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், #COVID19 தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக ஓபிஎஸ்-சுக்கு தொற்று இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினின் ட்வீட் அவருக்கு தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளது. அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

Related Stories: