சேலம் பெருமாள் கோயிலில் எடப்பாடி பழனிசாமி வழிபாடு; பரிவட்டம் கட்டி கும்பமரியாதை வழங்கினர்

சேலம்: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று கார் மூலம் சேலம் வந்தார். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று காலை சேலம் புறநகர் மாவட்டம் நங்கவள்ளி பக்கமுள்ள பெரியசோரகை சென்றாய பெருமாள்கோயிலுக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். பயபக்தியுடன் சாமி கும்பிட்டு வழிபாடு நடத்திய அவருக்கு பட்டாச்சாரியார்கள் பரிவட்டம் கட்டி கும்பமரியாதை வழங்கினர்.

மிகவும் பழமையான இந்த கோயிலில் அவர் முதல்வராக இருந்தபோது கும்பாபிஷேகம் நடத்தினார். கடந்த தேர்தலின்போது இங்கிருந்து தான் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். இது இவருக்கு ராசியான கோயிலாகும்.  பின்னர் எடப்பாடி பழனிசாமி சேலம் திரும்பினார். அவரை கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னையில் அதிமுக எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக நாளை காலை 8 மணிக்கு சேலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: