காவிரி வெள்ளப்பெருக்கு: பவானி கூடுதுறையில் நீராட தடை

ஈரோடு: காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி கூடுதுறையில் நீராட தடை விதிக்க பட்டுள்ளது. ஆடிமாத பிறப்பை ஒட்டி நாளை பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் 3 நதிகள் சங்கமிக்கும் இடமான கூடுதுறையில் நீராடிவிட்டு செல்வர். ஆற்றுக்குள் யாரும் இறங்காத வண்ணம் மூங்கில்களை வைத்து தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Related Stories: