×

இலங்கையில் இருந்து மேலும் 7 தமிழா்கள் தனுஷ்கோடிக்கு வருகை: அரிச்சல்முனையில் இருந்தவா்களை கடலோரக் காவல் படை மீட்பு

ராமநாதபுரம்: இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து ஏழு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. மேலும், அரசியல் குழப்பங்கள் நீடித்து வருவதால் சாமானிய ஏழை மக்கள் வாழ பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால், அங்கு வாழும் மக்கள் அண்டை நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபத்தான முறையில் கடல் மார்க்கமாக பயணம் செய்து இடம் பெயர்ந்து வருகின்றன. ஏற்கனவே, 29 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை பகுதியில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 2 சிறுவர்கள், 1 சிறுமி உட்பட 7 பேர் தஞ்சம் அடைந்து உள்ளனர். இதை அடுத்து, இந்திய கடலோரக் காவல் படையால் மீட்கப்பட்டு கரை சேர்ந்த அவர்கள் மண்டபம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். விசாரணை முடிந்த பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் அனைவரும் தங்கவைக்கப்பட உள்ளனர்.


Tags : Tamils ,Sri Lanka ,Dhanushkodi , Sri Lanka, Tamils, Dhanushkodi, Police Force, Rescue
× RELATED ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு