×

தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை தென்படவில்லை. பரிசோதனைக்காக சென்னையில் ஒரு ஆய்வகம் : அமைச்சர் மா சுப்பிரமணியன்

சென்னை : தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்புக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் குரங்கம்மை பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.

அரபு நாட்டில் இருந்து திருவனந்தபுரம் வந்த நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே முன்னெச்சரிக்கையாக விமான நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 63 வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு முகம், கைகளில் கொப்பளம் வந்தால் தெர்மல் ஸ்கேன் கேமரா மூலம் கண்காணிக்கிறோம். குரங்கு அம்மை நோய் கண்டறியும் ஆய்வு மையம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும்.

குரங்கு அம்மை பாதிப்பை கண்டறிய ஒரு ஆய்வகம் சென்னையில் அமைக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.மக்கள் பெரிய அளவில் பதற்றம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஐசிஎம்ஆர் மூலம் 15 நாட்களில் குரங்கு அம்மை நோய் கண்டறியும் ஆய்வு மையம் அமைக்கப்படும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை நன்றாக உள்ளது. மருத்துவர்கள் அறிவுறுத்தல்படியே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வில் இருக்கிறார்,என்றார்.


Tags : Tamil Nadu ,Chennai ,Minister ,Ma Subramanian , Monkey Measles, Testing, Chennai, Laboratory, Minister Ma Subramanian
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...