சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்: ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சீல்

ஈரோடு: ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஓசூரில்  தனியார் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சென்டர் மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது. ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை  விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவனை மீது இரண்டு நாட்களுக்கு முன்பு  நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இணை இயக்குனர் பரமசிவன் தலைமையில் நேற்று விஜய் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள ஸ்கேன் சென்டரை மூடும்படி அறிவுறுத்தினார். தொடர்ந்து அந்த ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் இந்த ஸ்கேன் சென்டரில் எவ்வித பரிசோதனைகளும் மேற்கொள்ளபடகூடாது  என்றும் தெரிவித்தார்.  இதனை தொடர்ந்து இன்னும் 15 நாட்களுக்குள் மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதன் அடிப்படையில் தொடர்ந்து அந்த மருத்துவமனை  நிர்வாகத்திடம் மேலும் கூடுதலாக  4 வாரங்கள் அளிக்கப்படும்  அந்த 4 வாரங்களுக்குள் நீங்கள் மேல்முறையீடு  செய்து உங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். அதன் அடிபடையில் தற்போது விஜய் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: