காமராஜர் 120வது பிறந்தநாளை முன்னிட்டு கவர்னர், அமைச்சர்கள் மரியாதை

சென்னை: காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காமராஜரின் 120வது பிறந்தநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழக அரசின் சார்பில் அண்ணா சாலை பல்லவன் இல்லம் அருகில் காமராஜர் சிலைக்கு அருகில் வைக்ப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எஸ்.ரகுபதி, மு.பெ.சாமிநாதன், பி.கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ், எம்எல்ஏக்கள் இ.பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில துணை பொது செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ மரியாதை செலுத்தினார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் காமராஜர் உருவப்படத்திற்கு அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மரியாதை ெசலுத்தினார். இதில் துணை தலைவர் கரு நாகராஜன், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், கராத்தே தியாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தி.நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். தமிழக காங்கிரஸ் சார்பில் தலைவர் கே.எஸ்.அழகிரி மரியாதை செலுத்தினார். இதில் செல்வபெருந்தகை, ஊடக துறை தலைவர் கோபண்ணா, எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகரன், அடையாறு துரை, டில்லி பாபு, முன்னாள் மாவட்ட பொருளாளர் தி.நகர் ராம், ஆர்டிஐ பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, சுமதி அன்பரசு, மலர்கொடி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாமக தலைவர் அன்புமணி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Stories: