ஆம்னி பஸ் எரிந்து நாசம்

அண்ணாநகர்:  அமைந்தகரை, புல்லா அவென்யூ பகுதியில் நேற்று மதியம் சாலையோரம்  ஆம்னி பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த பேருந்தில் இருந்து, திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில், பேருந்து மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. தகவலறிந்த அண்ணாநகர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும், பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுதொடர்பாக,  அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து, மின் கோளாறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: