×

கல்வியின் தரத்தை உயர்த்த அரசு பள்ளிகளை மாநகராட்சியோடு இணைக்க விரைவில் நடவடிக்கை: மேயர் பிரியா தகவல்

திருவொற்றியூர்: கல்வியின் தரத்தை உயர்த்த அரசு பள்ளிகளை  மாநகராட்சியோடு இணைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்தில் உள்ள 15 முதல் 22வது வார்டு வரை  நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மண்டல அலுவலகத்தில், மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நடந்தது.

மேயர் பிரியா தலைமையில், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது:
கவுன்சிலர்கள் தங்கள் வார்டின் தேவைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை  ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்து அதன் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கலந்தாய்வுக் கூட்டம் நடத்தபடுகிறது. அரசு பள்ளிகளை மாநகராட்சியோடு இணைத்து கல்வி மற்றும் பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரியிடம் பேசி உள்ளோம். தேவைப்படும் இடங்களில் கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்தி குப்பையை  முழுமையாக அகற்றப்படும். குப்பை அகற்றும் பணியில் ஈடுபடாதவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.

Tags : Mayor ,Priya , Government School, Corporation, Action, Mayor Priya
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து...