காமராஜர் பிறந்தநாள் விழாவில் வேறுபாட்டை கலைய பள்ளி சீருடையில் தலைமை ஆசிரியர்: மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

மதுராந்தகம்: காமராஜர் பிறந்தநாள் விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி சீருடையில் கலந்து கொண்டதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்தனர். அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பெரும்பாக்கம் ஊராட்சி கூடப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தமிழக அரசின் உத்தரவுப்படி காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் தரன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் செல்வி முன்னிலை வகித்தார். பள்ளி இடைநிலை ஆசிரியை தீபா அனைவரையும் வரவேற்றார்.

பள்ளி வளாகத்தில் காமராஜர் உருவ படம் வைத்து மாலை அணிவித்து மலர்தூவி ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் மரியாதை செலுத்தினர். பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.  இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் தர் மாணவர், ஆசிரியர் வேறுபாடு கலைய பள்ளி சீருடையில் கலந்து கொண்டது அப்பள்ளி மாணவ, மாணவிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடதக்கது.

Related Stories: