×

செஸ் ஒலிம்பியாட் டீஸர் ரஜினி வெளியிட்டார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து குணமடைய நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்ததுடன், 44வது செஸ் ஒலிம்பியாட் டீசரை நேற்று வெளியிட்டார்.

இதுகுறித்து, நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவு:
கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும். 44வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல்முறையாக இந்தியாவில், அதுவும் நம் தமிழகத்தில் நடைபெற இருப்பது நமக்கெல்லாம் பெருமை. அதனை எதிர்வரும் 28ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். போட்டி குறித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு வீடியோ தயாரித்துள்ளனர். அதன் டீஸரை வெளியிடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இவ்வாறு  ரஜினி டிவிட்டர் கூறியுள்ளார்.

Tags : Rajini , Chess Olympiad Teaser, Rajinikanth,
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...