×

எடப்பாடி, தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி நீக்கப்பட்ட நிலையில் அதிமுகவில் இருந்து மேலும் 44 பேரை நீக்கினார் ஓபிஎஸ்: 42 மாவட்ட செயலாளர்கள் பதவி காலி

சென்னை: எடப்பாடி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட 22 பேர் நீக்கப்பட்ட நிலையில், மேலும் 44 பேரை அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதில் 42 பேர் மாவட்ட செயலாளர்கள்.

 அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அதிமுகவிற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால்,

பொள்ளாச்சி ஜெயராமன் (திருப்பூர் மாவட்ட செயலாளர்), சி.விஜயபாஸ்கர் (புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர்), கீர்த்திகா முனியசாமி (மகளிர் அணி இணை செயலாளர்), ஆர்.எஸ்.ராஜேஷ் (வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர்), டி.ஜி.வெங்கடேஷ் பாபு (வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர்), நா.பாலகங்கா (தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர்), வி.சோமசுந்தரம் (காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்), திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் (செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர்), சிட்லபாக்கம் ராசேந்திரன் (செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர்), பா.பென்ஜமின் (திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர்), வி.அலெக்சாண்டர் (திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர்), மாதவரம் மூர்த்தி (திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர்), பி.வி.ரமணா (திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர்),

எஸ்.ஆர்.கே.அப்பு (வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர்), த.வேலழகன் (வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர்), கே.சி.வீரமணி (திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்), சு.ரவி (ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்), தூசி கே.மோகன் (திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர்), அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர்), கே.ஏ.பாண்டியன் (கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்), ஆர்.அருண்மொழிதேவன் (கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்), இரா.குமரகுரு (கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்), கே.அசோக்குமார் (கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர்), கே.பி.அன்பழகன் (தர்மபுரி மாவட்ட செயலாளர்), ஜி.வெங்கடாஜலம் (சேலம் மாநகர் மாவட்ட செயலாளர்), கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர்), கே.சி.கருப்பணன் (ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர்), சி.மகேந்திரன் (திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர்),

அம்மன் கே.அர்ச்சுணன் (கோவை மாநகர் மாவட்ட செயலாளர்), பி.ஆர்.ஜி.அருண்குமார் (கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்), கப்பச்சி டி.வினோத் (நீலகிரி மாவட்ட செயலாளர்),  எம்.பரஞ்சோதி (திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்), ப.குமார் (திருச்சி புறநகர் தெற்கு மாட்ட செயலாளர்), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர் மாவட்ட செயலாளர்), எஸ்.பவுன்ராஜ் (மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்), ஆர்.காமராஜ் (திருவாரூர் மாவட்ட செயலாளர்), பி.கே.வைரமுத்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர்), பி.ஆர்.செந்தில்நாதன் (சிவகங்கை மாவட்ட செயலாளர்), எம்.ஏ.முனுசாமி (ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்), தச்சை என்.கணேசராஜா (திருநெல்வேலி மாவட்ட செயலாளர்),

எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர்), எஸ்.பி.சண்முகநாதன் (தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்), டி.ஜாண்தங்கம் (கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர்), ஏ.அன்பழகன் (புதுச்சேரி மாநில (கிழக்கு) செயலாளர் ஆகியேர் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பெறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சி தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Edapadi ,Thangamani ,Velamani ,K. GP , Edappadi, Thangamani, Velumani, KP Munusamy, AIADMK, OPS,
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...