×

தனுஷ்கோடி மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட 7 பேர் மீட்பு

ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால், அங்கு வசிக்கும் தமிழர்கள் தமிழகத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். இலங்கை தலைமன்னார் கடற்கரையில் இருந்து நேற்று மதியத்திற்கு மேல் 3 சிறுவர்கள் உள்பட 7 பேர், பைபர்கிளாஸ் படகில் தனுஷ்கோடிக்கு புறப்பட்டு வந்தனர். இவர்களை இலங்கை படகோட்டிகள், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் மணல் திட்டில் இறக்கி விட்டு திரும்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் போலீசார் அங்கு சென்றனர்.

அவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மண்டபத்திலுள்ள இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹோவர்கிராப்ட் கப்பலில் கடலோர காவல்படையினர் அங்கு வந்தனர். மணல் திட்டு பகுதிக்கு சென்று அங்கிருந்த இலங்கையை வவுனியா செட்டிகுளத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 7 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இவர்களிடம் மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்குப்பின் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனைவரும் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

Tags : Dhanushkodi , Dhanushkodi, sand bar, rescue
× RELATED இனி மணலில் நடக்க தேவையில்லை தனுஷ்கோடி...