விளக்கு ஏற்றும் போது விபரீதம்: சேலையில் தீப்பிடித்து திருத்தணி எம்.எல்.ஏ மாமியார் படுகாயம்

சென்னை: வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது, சேலையில் தீபிடித்து திருத்தணி எம்எல்ஏ மாமியார் படுகாயம் அடைந்தார். பலத்த தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை, சூளைமேடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த சகுந்தலா (81) திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரனின் மாமியார் ஆவார். இவர் வெள்ளிக்கிழமை என்பதால் நேற்று வீட்டில் உள்ள பூஜை அறையில் வழிபாடு செய்வதற்காக விளக்கு ஏற்றினார். அப்போது எதிர் பாராத விதமாக சேலை தீப்பிடித்து, மளமளவென பரவியது. வலி தாங்க முடியாமல் அவர் எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து சகுலந்தாவை காப்பாற்றினர்.

பின்னர் அவர் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். அவர் 90 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சூளைமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: