×

குடிநீர் குழாய் பணி, ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி: ஈ.வெ.ரா சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: குடிநீர் குழாய் அமைக்கும் பணி காரணமாக ஈவெரா சாலையில் காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாயின்ட் சந்திப்பு வரை வரும் 18ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை ஈவெரா சாலையில் காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாயின்ட் சந்திப்பு வரை குடிநீர் வாரியம் சார்பில் பள்ளம் தோண்டி ராட்சத குடிநீர் குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ள உள்ளதால், 15ம் தேதி இரவு 10 மணி முதல் (நேற்று), வரும் 18ம் தேதி காலை 5 மணி வரை அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* ஈவெரா சாலையில் தாசபிரகாஷ் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி வரும் வாகனங்கள் எந்தவித மாற்றமின்றி நேராக செல்லலாம்.
*  ஈவெரா சாலையில் காந்தி இர்வின் ேமம்பாலம் சந்திப்பிலிருந்து தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை.
*  காந்தி இர்வின் மேம்பாலம் சந்திப்பிலிருந்து ஈவெரா சாலை வழியாக தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி செல்ல கூடிய வாகனங்கள், காந்தி இர்வின் மேம்பாலம் சந்திப்பிலிருந்து காந்தி இர்வின் மேம்பாலம், காந்தி இர்வின் சாலை, அழகு முத்துக்கோன் சிலை, எழும்பூர் ரயில் நிலையம், உடுப்பி பாயின்ட் மற்றும் நாயர் மேம்பாலம் வழியாக ஈவெரா சாலையை அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், அண்ணாநகர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குப்பட்ட 2வது நிழற்சாலையில் நாளை மற்றும் 24, 31, மற்றும் அடுத்த மாதம் 7, 14 ஆகிய ஞாயிற்றுகிழமைகளில், ‘ஹாப்பி ஸ்ட்ரீட்’ என்ற நிகழ்ச்சி நடைபெற இருப்பதால், 2வது நிழற்சாலையில் புளுஸ்டார் சந்திப்பு முதல் 2வது நிழற்சாலை, 3வது பிரதான சாலை சந்திப்பு (நல்லி சில்க்ஸ்) வரை காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.
* திருமங்கலத்திலிருந்து அண்ணாநகர் ரவுண்டானா சிந்தாமணி நோக்கி செல்லும் வாகனங்கள் புளுஸ்டார் சந்திப்பில் 5வது நிழற்சாலையில் இடது புறம் திரும்பி 6வது நிழற்சாலை. அண்ணாநகர் காவல் நிலையம் ரவுண்டானாவை அடைந்து சிந்தாமணி ரவுண்டானாவுக்கு செல்ல வேண்டும்.
*  திருமங்கலத்திலிருந்து அமைந்தகரை, ஈ.வெ.ரா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், புளுஸ்டார் சந்திப்பில் 5வது நிழற்சாலையில் வலதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலையை அடைந்து அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்லவேண்டும்.
* அண்ணாநகர் ரவுண்டானாவிலிருந்து திருமங்கலம் நோக்கி செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலையில் நல்லி சில்க்ஸ் அருகே 3வது பிரதான சாலையில் இடதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலை வழியாக திருமங்கலம், முகப்பேர் செல்ல வேண்டும்.
*  புளுஸ்டார் சந்திப்பில் 5வது நிழற்சாலையிருந்து (ஜெஸ்சி மோசஸ் பள்ளி மார்க்கதிலிருந்து) 2வது நிழற்சாலைக்கு (அண்ணாநகர் ரவுண்டானா நோக்கி) இடதுபுறம் திரும்புவதை தவிர்த்து 5வது நிழற்சாலையில் நேராக சென்று 4வது நிழற்சாலை வழியே செல்ல வேண்டும்.
*  இந்த போக்குவரத்து மாற்றங்கள் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மேற்கண்டவாறு செயல்படுத்தப்படும்.
இவ்வாறு போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags : EVRA , Drinking Water Pipeline Work, Happy Street Program: Traffic Diversion on EVRA Road
× RELATED அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு...