×

காஞ்சிபுரத்தில் ரூ.59 லட்சத்தில் நலத்திட்ட பணிகள்: எம்எல்ஏ துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரூ.59 லட்சம் மதிப்பீல் பல்வேறு நடத்திட்ட  பணிகளை காஞ்சி எம்எல்ஏ எழிலரசன் துவங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பணிகளை துவக்கி வைத்தும், பணி நிறைவுற்ற கட்டிடத்தை திறந்து வைத்தும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மேசைகள் என ரூ.59 லட்சம் மதிப்பில் வழங்கினார். காஞ்சிபுரம் புத்தேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.

இதனை தொடர்ந்து திருப்பருத்திகுன்றம் ஊராட்சி குளக்கரை பகுதியில் ரூ.6.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காரியம் மண்டபத்தை திறந்து வைத்தார். பின்னர், ஆதிதிராவிடர் பள்ளிக்கு ரூ.3.75 மதிப்பிலான மேஜை, நாற்காலிகளை வழங்கினார். திருப்புக்குழி ஊராட்சியில் எம்எல்ஏ நிதியிலிருந்து ரூ.7 லட்சம் அமைக்கப்பட உள்ள தார் சாலை மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய சிமென்ட் சாலை தொடங்கி வைத்தார். உழக்கோல்பட்டு கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் திறந்து வைத்தார்.  

விழாவில், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், திமுக ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், ஒன்றிய குழு துணை தலைவர் திவ்யபிரியா இளமது, ஒன்றிய குழு உறுப்பினர் ரேகா ஸ்டாலின், திருப்பருத்தி குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் மலர் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சம்பத், பி.எம் நீலகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MLA ,Kangipura , 59 lakh welfare works in Kanchipuram: MLA inaugurated
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...