கோவை அருகே உள்ள மத்திய சிறைச்சாலையில் நடைபெறும் அரசு பொருட்காட்சியில் காவலர் தற்கொலை முயற்சி?

கோவை: கோவை காந்திபுரம் அருகே உள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தற்கொலை முயற்சி என தகவல் வெளியாகியுள்ளது. ஆயுதப்படை காவலர் காளிமுத்து அரசு பொருட்காட்சி நடக்கும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

துப்பாக்கி சுடப்பட்டதில் வலதுபுற வயிற்று பகுதியில் காவலருக்கு காயம் ஏற்பட்டு கோவை பந்தய சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். தடையவியல் போலீசார் சம்பவம் தொடர்பாக  கைரேகை பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துப்பாக்கி எப்படி சுட்டப்பட்டது என்பது குறித்து காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

Related Stories: