×

வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேஷ் தாய் மரணம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழக முன்னாள் துணை அமைச்சர் ஐசரி வேலனின் துணைவியாரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர்  ஐசரி கணேஷின் தாயாருமான புஷ்பா ஐசரி வேலன் (75) நேற்று காலமானார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள  இல்லத்தில் அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர், தொழிலதிபர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.  தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் பன்னீர்செல்வம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிட கழக தலைவர் வீரமணி ஆகியோரும் ஐசரி கணேஷை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் தொல் திருமாவளவன், புதிய நீதி கட்சி தலைவர் ஷண்முகம், திமுக எம்பி ஜெகத்ரட்சகன், திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பா, பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி, பூச்சிமுருகன், அதிமுக முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, மனோஜ் பாண்டியன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

டிஜிபி விஸ்வநாதன், ஓய்வுபெற்ற டிஜிபி ரவி, சந்தோசம், ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர்  வெங்கடாச்சலம், அப்பல்லோ மருத்துவமனை விஜய் ரெட்டி, கல்யாண சுந்தரம், விஐடி பல்கலைக்கழக துணை தலைவர்  செல்வம், சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தர் மரியா ஸீனா, ஜேப்பியார் கல்லூரி தலைவர் ரெஜினா, லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, அன்பு செழியன், ராஜன், இயக்குனர்கள் சங்கர், கவுதம் மேனன்,  நடிகர்கள் பிரபு, கவுண்டமணி, ராதா ரவி, எஸ்.வி.சேகர், ஆனந்தராஜ், பூர்ணிமா பாக்கியராஜ், பிரசாந்த், சிம்பு, ஜீவா, விக்ரம் பிரபு, பாலாஜி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

Tags : University of Wales ,Isari Ganesh ,Chief Minister ,M. K. Stalin , University of Wales chancellor Isari Ganesh's mother dies; Obituary of Chief Minister M. K. Stalin
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்