மூன்று நாள் பயணமாக ராகுல் காந்தி தமிழகம் வருகை; கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் இன்று அளித்த பேட்டி:  காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறையில் ஆஜராக சம்மன் அனுப்பியதை கண்டித்து வருகின்ற 21ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

22ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அக்டோபர் இரண்டாம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள இருக்கின்றார். இதற்காக தலைவர் ராகுல் காந்தி மூன்று நாட்கள் தமிழகத்தில் பயணம் மேற்கொள்கின்றார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: