×

120வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு கவர்னர், அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை: காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக அரசு சார்பில் சென்னை அண்ணாசாலை பல்லவன் இல்லம் எதிரில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மூத்த அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, வெள்ளக்கோவில் சாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்எல்ஏக்கள் பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விசிக சார்பில் மாநில துணை பொது செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் காமராஜர் திருவுருவப்படத்திற்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை ெசலுத்தினார். இதில் துணை தலைவர் கரு நாகராஜன், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சென்னை தி.நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்பாது வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர். தமிழக காங்கிரஸ் சார்பில் தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, ஊடக துறை தலைவர் கோபண்ணா, எஸ்.சி.பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகரன், அடையாறு துரை, டில்லி பாபு, முன்னாள் மாவட்ட பொருளாளர் தி.நகர் ராம், ஆர்டிஐ பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, சுமதி அன்பரசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : Governor, Ministers ,Party Leaders ,Kamarajar , Governor, ministers, party leaders pay tribute to Kamaraj statue on 120th birthday
× RELATED தேர்தல் விதி மீறல் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு