×

ஏட்டிக்குப் போட்டியாக அதிரடி நீக்கங்கள்.... முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன் உள்ளிட்ட 44 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் : ஓபிஎஸ்

சென்னை: அதிமுகவில் இருந்து மேலும் 44 ஈபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கி ஓ பன்னீர் செல்வம் இரண்டாவது பட்டியலை வெளியிட்டார். ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் மகன்கள் உள்ளிட்ட 18 அதிமுக நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நீக்கி நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்கவதாக பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இந்நிலையில் மேலும் 44 பேரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, வடசென்னை வடக்கு(கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம். பரஞ்சோதி, கே.சி.கருப்பணன், பொள்ளாச்சி ஜெயராமன்,  சி.விஜயபாஸ்கர் .பெஞ்சமின். கே.சி. வீரமணி , கே.பி.அன்பழகன், காமராஜ், எஸ்.பி.சண்முகநாதன், கே.வி. ராமலிங்கம், மாதவரம் மூர்த்தி உள்ளிட்ட 44 பேரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார் .

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும்,  கழகப் பொருளாளருமான ஓ. பன்னீர்செல்வம் என குறிப்பிட்டு வெளியாகி உள்ள அறிக்கையில் , கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் ,கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு , மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும் , கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு கழகமும் அவப்பெயரும்  உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் 44 பேரை குறிப்பிட்டு கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.இவர்கள் அனைவரும் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : C. Vijayapaskar ,K. RC , Ex, Ministers, MR. Vijayabaskar, KC Karuppanan
× RELATED சமதர்ம சமுதாயமே காங்கிரஸின் கொள்கை: கே.சி.வேணுகோபால் கருத்து