கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்கள் சீசன் ‘பினிஷ்’

கொடைக்கானல்:  கொடைக்கானலில்  விளையக்கூடிய பழங்களில் முதன்மையானது பிளம்ஸ் பழங்கள் ஆகும். ஆண்டுதோறும்  ஏப்ரல், மே மாதங்களில் இந்த பிளம்ஸ் பழங்கள் அறுவடை செய்யப்படும். இந்த  ஆண்டு பிளம்ஸ் பழங்களின் விளைச்சல் மிக குறைவாகவே இருந்தது. ஆனால் நல்ல  விலை கிடைத்தது. மகசூல் குறைந்து விலை அதிகமாக இருந்த காரணத்தினால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 மே, ஜூன் மாத இறுதியில் ப்ளம்ஸ் பழங்களின்  அறுவடை முடிவடையும். இந்நிலையில் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத நிலையாக  ஜூலை மாதம் வரை அறுவடை செய்யப்பட்டது. ஒரு கிலோ பிளம்ஸ் ரூ.200 முதல்  ரூ.250 வரை விலை போய் வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த பிளம்ஸ்  பழங்களின் அறுவடை சீசன் முடிந்து உள்ளது. மீண்டும் அடுத்த ஆண்டு தான்  பிளம்ஸ் பழங்களின் அறுவடை சீசன் தொடங்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: