×

திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நுரையுடன் வெள்ளநீர் வெளியேருவதால் மக்கள் அச்சம்

திருப்பூர்: திருப்பூர் நொய்யலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப்பாளையத்தில் உள்ள தரைப்பாலம் நீரில் முழ்கியது. மேற்கு திசைக்காற்றின் மேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக திருப்பூர் நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக அணைபாளையத்தில் உள்ள தரைப்பாலமானது முழ்கியுள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அணைப்பாளை பகுதியில் போக்குவரத்து மாற்றங்களையும் போலீசார் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

 திருப்பூர் மாவட்டம் மங்களம் அடுத்துள்ள நல்லம்மன் கோயில் பகுதியில் அமைந்துள்ள நல்லம்மன் கோவில் மற்றும் அந்த பாதையை சுற்றியுள்ள பகுதியில் நொய்யலாற்றின் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் அதிக அளவில் நுரையுடன் வெள்ளநீர் வெளியேறுவதால் இப்பகுதியை சுற்றியுள்ள சாய ஆலைகள் தங்களது சாயக்கழிவுகளை வெளியேற்றி வருவதாகவும் அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து உரிய  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மாவட்டம் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.


Tags : Tiruppur ,Noel , Flooding in Tirupur Noyal River: People fear as flood water comes out with foam
× RELATED பல்லடம் அருகே கடன் தொல்லையால்...