அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதியான பாம்பாற்றில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு- தூவானம் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

திருப்பூர்: அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதியான பாம்பாற்றில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான பாம்பாறு ,தூவானம், மறையூர், காந்தளூர் போன்ற பகுதிகளை இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் மறையூர் கோவில் கடவு பகுதியில் உள்ள பாம்பாற்றில் 3-வது  நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளால் பாலத்தின் மீது தண்ணீர் சீறிப்பாய்ந்து வருகிறது. இதன் காரணமாக தூவானம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது

அமராவதி அணைக்கு தற்சமயம் நீர்வரத்து வினாடிக்கு 8,563 கனஅடியாக உள்ள நிலையில் பாதுகாப்பு கருதி  பிரதான 4 மதகு வழியாக 1531 கன அடி நீரும் ,பிரதான கால்வாய் வழியாக 190 கன அடியும் வெளியேற்றபடுகிறது. அமராவதி அணையின்  மொத்த 90 அடியில்  தற்பொழுது மொத்த 90 அடியில் 85.83 அடியாக உள்ள நிலையில் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வண்ணம் உள்ளதால் நேற்றைய தினம் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: