சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் இரண்டு ஓடுபாதைகள் இயக்கம்..: இனி விமான சேவையில் தாமதம் இருக்காது என தகவல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் இரண்டு ஓடுபாதைகளில் விமான சேவை நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. சென்னை விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகள் உள்ளன. பெரிய ஓடுபாதை பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்கி புறப்படுவதற்க்கும் மற்றோன்று சிறிய ரக விமானங்கள் இயக்கவும் பயன்படுத்தபட்டு வந்தது.

விமான சேவை அதிகரித்து வரும் நிலையில் இரண்டு ஓடுபாதைகளிலும் மாற்றங்கள் கொண்டு வர இந்திய விமான நிலையம் ஆணையம் திட்டமிட்டது. அதன்படி இரண்டு ஓடு பாதைகளிலும் ஒரே நேரத்தில் விமான சேவையை வழங்குவற்க்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக விமான நிலைய போக்குவரத்து கட்டுபாட்டு அறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் தரையிறங்கும் விமானங்கள் விரைந்து வந்து விமானங்கள் நிற்கும் நடைமேடைக்கு செல்ல ஏதுவாக டாக்ஸிவேயின் ஏற்படுத்தும் பணிகள் நடத்தப்பட்டன. அனைத்து பணிகளும் முடிந்து நடத்தப்பட்ட சோதனையில் வெற்றியடைந்தது. இந்த சேவை நேற்று முழுமையாக தொடங்கப்பட்டது. இதனால் ஒரே மணி நேரத்தில் 36 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதே நேரத்தில் 50 விமானங்கள் இயக்க முடியும். இதனால் விமான சேவையில் எந்த தாமதமும் இனி ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: