×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியே நெருங்கியது: கே.ஆர்.எஸ்., கபினி அணைகளிலிருந்து நீர்திறப்பு 1.13 லட்சமாக உயர்வு

பெங்களூரு: தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியே நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் மற்றும் காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளின் பாதுகாப்பு கருதி கடந்த 5 நாட்களாக தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரித்து வருகிறது.

கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நேற்று வரை 1,03,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது நீர்திறப்பு 1,13,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 85,000 கனஅடியாக தண்ணீரும், கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 28,000 கனஅடியாக தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.  

கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் ஒகேனக்களுக்கு  வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக தற்போது வருகிறது. நேற்று மாலை வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 113.96 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 82,642 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 20,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Mettur ,KRS ,Kabini , Mettur dam level nears 114 feet: Release from KRS, Kabini dams rises by 1.13 lakh
× RELATED மேட்டூர் வலதுகரை வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்