×

ராஜீவ் காந்தி கொலை வழக்கு.: ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு..: தமிழக அரசு உத்தரவு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆர்.பி.ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஏழு கைதிகள் தண்டனை பெற்றனர்.  

இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தவித்து வருகின்றனர். இதில் பேரறிவாளன் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார். மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ராஜீவ் கொலை வழக்கு கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மதுரை மத்திய சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ரவிச்சந்திரனுக்கு 10-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 17-ல் பரோலில் வெளியே வந்த நிலையில், ரவிச்சந்திரனுக்கு 10-வது முறையாக பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அவரது தாயார் ராஜேஸ்வரி உடல்நலம் பாதிப்பு காரணமாக, அவர் உடனிருந்து கவனித்துக் கொள்ளும் வகையில், மேலும் 30 நாட்கள் கூடுதலாக பரோலை தமிழக அரசு அளித்துள்ளது.

Tags : Rajiv Gandhi ,Ravichandran ,Tamil Nadu Government , Rajiv Gandhi murder case.: Ravichandran's parole extended by one more month..: Tamil Nadu government orders
× RELATED மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக...