மதுரை மத்திய சிறைக்காவலர் டிஸ்மிஸ்

மதுரை: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கிளைச்சிறையில் கடந்த 2011ல் பணியில் சேர்ந்து, இரண்டாம் நிலை காவலராக இருப்பவர் ஆனந்த். இவர் மாற்று பணியாக மதுரை மத்திய சிறையில் தற்போது பணியாற்றி வருகிறார். அறிவிப்பின்றி விடுப்பு எடுப்பது, எந்தவித விளக்கமும் அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் இருப்பது என இருந்துள்ளார். இதற்காக அவர் மீது பல முறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து புகார் எழுந்ததால் ஆனந்த்தை நேற்று டிஸ்மிஸ் செய்து சிறைத்துறை கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று ஒழுங்கீனமாக நடந்து கொண்டால், உரிய விசாரணை மேற்கொண்டு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Related Stories: