முன்னோட்டம் வெளியானது இந்திரா காந்தி போல் நடிக்கும் கங்கனா

மும்பை: பாலிவுட்டில் கங்கனா ரனவத் நடிக்கும் புதிய படம், ‘எமர்ஜென்சி’. இதில் அவர், மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கிறார். மேலும், இப்படத்தை அவரே இயக்குகிறார். இது இந்திரா காந்தியின் வாழ்க்கையைப் பற்றிசொல்லும் படம் இல்லை. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அவர் கொண்டு வந்த எமர்ஜென்சியை மையமாக வைத்து உருவாக்கப் படும் படம். இதன் திரைக்கதை, வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதி இருக்கிறார்.

இந்திரா காந்தியை சர்வாதிகாரி போல் சித்தரித்து, அவரது புகழுக்கு களங்கம் விளைவிப்பது மட்டுமின்றி, பாஜவை திருப்திப்படுத்தவே இப்படத்தை கங்கனா உருவாக்குகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு இடையே, படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியிடப்பட்டது. இதில் இந்திரா காந்தி போல் நடித்துள்ள கங்கனா, அவரது மேனரிசங்களுடன் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories: