ஜஸ்வந்த் சிங் பயோபிக்கில் அக்‌ஷய்

மும்பை: கடந்த 1989ல் மேற்கு வங்க மாநில சுரங்கம் ஒன்றில் வெள்ளத்தில் சிக்கிய பல தொழிலாளர்களை மீட்டவர், ஜஸ்வந்த் சிங். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் பகுதியில் கடந்த 1939ல் பிறந்த அவர், சுரங்க பொறியாளராகப் பணியாற்றினார். பிறகு 2019ல் மரணம் அடைந்தார். ரியல் ஹீரோவாகப் போற்றப்பட்ட அவரது வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாக்கப்படுகிறது. தினு சுரேஷ் தேசாய் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.

Related Stories: