×

எனது குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் மாணவர்களின் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு  கருத்தரங்கு நடைபெற்றது. இதில் செயல் அலுவலர் மாலா தலைமை தாங்கினார். இதில் சிட்ரபாக்கம் கிராமத்தில் உள்ள வலை மீட்பு பூங்காவில் உள்ள மக்கும் குப்பை மக்காத குப்பைகளை உரமாக்குவது பற்றியும் அதை தயார் செய்யும் இயந்திரங்கள் பற்றியும், பிளாஸ்டிக் பைகள் மறு சுழற்சி செய்வது, மண்புழு உரம் எப்படி தயார் செய்வது குறித்தும், பிளாஸ்டிக் பயன்பாடு அதன் மறு சுழற்சி குறித்தும் மாணவர்களிடம் செயல் அலுவலர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து பேச்சு, கட்டுரை, ஓவியம் போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், சிறந்த தூய்மை பணியாளர்கள் 3 பேருக்கும், கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பேருராட்சி தலைவர் அப்துல் ரஷீத் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், பேருராட்சி ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : My Garbage My Responsibility Awareness Seminar
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...