இல்லம் தேடி கல்வி வட்டார மேற்பார்வையாளருக்கு கல்வி மாமணி விருது

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த பொம்மராஜ்பேட்டை ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை உதவி ஆசிரியராக சி. நாகலிங்கம் பணியாற்றி வருகிறார். கற்பித்தல் பணியில் ஆர்வம் கொண்ட அவரின் கல்விப்பணிக்கு சான்றாக  இல்லம் தேடி கல்வி வட்டார மேற்பார்வையாளராக வாய்ப்பு வழங்கப்பட்டு அனைத்து கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று பள்ளி குழந்தைகளுக்கு கற்பித்தல் பணியில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார். அவரின் கல்வி சேவையை பாராட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் சிறந்த கல்வியாளர், நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பசுமை வாசன் பவுண்டேஷன், காமராஜர் இளைஞர் எழுச்சி பேரவை இணைந்து சமூயப் பணியில் ஆர்வத்துடன் பணியாற்றி வருபவர்களுக்கு சமீபத்தில் விருது மற்றும் பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர். இதில் அரசுப் பள்ளி ஆசிரியர் சி. நாகலிங்கம் காமராஜரின் கல்வி மாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு விருது, சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டார்.

Related Stories: