×

ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்பில் 217 இருளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள்: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர்  மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொடுகாடு ஊராட்சியில் 217 இருளர் இன மக்களுக்கு ரூ.1 கோடியே 43 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பீட்டில் 8.45 ஏக்கர் பரப்பளவில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் விழா  நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். சார் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வரவேற்றார். திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலரக் சு.அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் சிறப்பு விருந்தினராக கொண்டு இருளர் இன மக்களுக்கு வழங்கப்பட உள்ள வீட்டுமனைகளை பார்வையிட்டார்.

பிறகு அமைச்சர் 217 குடும்பங்களுக்கு  இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிப் பேசியது: வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இருளர் இன மக்கள் 217 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய இந்த பகுதிக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நகர் (எம்.கே.எஸ்.நகர்) என்றும் பெயர் சூட்டினார். பின்னர் அவர் பேசியது, கடந்த காலத்தி்ல் வீட்டுமனைப் பட்டா வழங்கிய பிறகு அந்த நிலம் எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொள்ள சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனால்  வீட்டுமனை இருக்கும் நிலத்தின் அருகிலேயே விழா நடத்தி, ஒதுக்கப்பட்ட வீட்டு மனையை வருவாய்த்துறையினர் அடையாளம் காட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஆதிசேஷன், ஒன்றிய செயலாளர் எம்.ரமேஷ், ஒன்றிய குழு தலைவர் சுஜாதா சுதாகர், ஒன்றிய குழு துணை தலைவர் சரஸ்வதி ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர் மண்டல துணை வட்டாட்சியர் அருணா, வருவாய் ஆய்வாளர்கள், கணேஷ், விஷ்ணுபிரியா,வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் குமரன், சேகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* புறம்போக்கு நிலத்தில் வசித்தவர்களுக்கு பட்டா
அதிகத்தூர் கிராமத்தில் 15 ஆண்டுகளாக கோயில் புறம்போக்கு நிலத்தில் குடிசை வீடு கட்டி  வசித்து வந்த 64 இருளர் இன மக்களுக்கும் ஏகாட்டூர் கிராமத்தில் 25  ஆண்டுகளாக நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் குடிசை வீடு கட்சி வசித்து வந்த 14 பேருக்கும் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் 10 ஆண்டுகளாக கோயில் புறம்போக்கு நிலத்தில் குடிசை வீடு கட்டி வசித்து வந்த 10 பேருக்கும், நயப்பாக்கம் கிராமத்தில் 10 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் குடிசை வீடு கட்டி வசித்து வந்த 21 பேருக்கும் கடம்பத்தூர் கிராமத்தில் 3 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் கூரை வீடு கட்சி வசித்து வந்த 20 பேருக்கும் திருப்பாச்சூர் கிராமத்தில் 15 ஆண்டுகளாக மயானம் புறம்போக்கு நிலத்தில் குடிசை வீடு கட்சி வசித்து வந்த 47 குடும்பத்துக்கு கண்ணம்மாபேட்டை கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக  பூண்டி நீர்த்தேக்கம் நீர் நிலை புறம்போக்கு நிலத்தில் குடிசை வீடு கட்டி வசித்து வந்த 24 பேருக்கு தொடுகாடு கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம நத்தம் வகைபாட்டில் வீடு கட்டி வசித்து வரும் 17 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டது.

Tags : Minister ,Avadi S. M. Nassar , 1 Crore 44 Lakhs worth Rs. 1 Crore 44 Lakhs to 217 Irulars Free Home Deeds: Minister Avadi S.M. Nassar
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...