×

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை

காஞ்சிபுரம்: ஆதிதிராவிடர் நல விடுதி மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது குறிதது காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் இயங்கும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி பயில விரும்பும் 4ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கு 85 சதவீதம். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவ, மாணவியர்களுக்கு 10 சதவீதம், பிற வகுப்பினர்கள் 5 சதவீதம் என்ற விகிதத்தில் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ, மாணவியர்கள் https://tnadw-hms.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை இணைய தளவழியில் விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளுக்கு 5.2.2022 முதல் 20.7.2022 வரையிலும் கல்லூரி விடுதிகளுக்கு 18.7.2022 முதல் 5.8.2022 வரையில் பதிவேற்றம் செய்யப்படும். எனவே, விடுதிகளில் மாணவர்களை சேர்த்து கல்வியில் முன்னேற்றம் பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Adi Dravidian ,Tribal Welfare Hostels , Admission in Adi Dravidian, Tribal Welfare Hostels
× RELATED குடும்ப பிரச்னையில் மனைவி அளித்த...