×

உத்திரமேரூர் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திமுகவுக்கு வெற்றியை தேடி தந்தவர் உதயநிதி ஸ்டாலின்: சுந்தர் எம்எல்ஏ பேச்சு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே திமுகவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், திமுகவுக்கு வெற்றியை தேடி தந்தவர் உதயநிதி ஸ்டாலின் என காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ பேசினார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதில், மாவட்ட செயலாளர் க.சுந்தர் பேசுகையில், ‘நமது இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின், கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாததை சுட்டிக்காட்டிடும் வகையில் செங்கல் வைத்து பிரசாரம் செய்து திமுகவின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும், நமது உதயநிதிஸ்டாலின், பேச்சு சட்டப்பேரவையில் ஆணையாக வெளியிடக்கூடிய அளவிற்கு உண்மையானதாக இருக்கும். அதுமட்டுமல்லாது இளைஞரணியினை பயிற்சி பாசறை கூட்டங்களை நடத்தி திராவிட மாடல், திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது என பேசினார்.

இதனை தொடர்ந்து, ஆட்சி மாற்றத்திற்கு உதவியதாக கூறி உதயநிதிஸ்டாலின் வெள்ளி செங்கல் மற்றும் வெள்ளி வீர வாளும் பரிசாக வழங்கப்பட்டது. இதில், கழகத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றிய மூத்த முன்னோடியான காஞ்சி நகர துணை செயலாளர் கருணாநிதி உடல் நலக்குறைவால் உயிரிழந்த்தையடுத்து அவரின் குடும்பதிற்கு சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவியும், உத்திரமேரூரில் மூத்த முன்னோடியான மாவட்ட பிரதிநிதி நீலகண்டனின் மருத்துவ செலவிற்கு ரூ.1 லட்சமும் சார்பில் உதயநிதிஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், சேகர், டி.குமார், குமணன், பி.எம்.குமார், பூபாலன், சத்யசாய், கண்ணன், தம்பு, சிவகுமார், ஏழுமலை, ராமச்சந்திரன், சிற்றரசு, பாபு, சரவணன், நகர செயலாளர்கள் ஆறுமுகம், கே.குமார், மாவட்ட நிர்வாகிகள் வெளிக்காடு ஏழுமலை, நாகன், கோகுல கண்ணன், செங்குட்டுவன், சீனிவாசன், வெடால் ராமலிங்கம், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், பாண்டியன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணி, யுவராஜ்,  பால்ராஜ், எழிலரசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் துர்கேஷ், மாவட்ட பிரதிநிதி குணசேகரன் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் சசிகுமார் உள்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

* பயனாளிகள் திமுகவுக்கு நன்றி
சாலவாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட பொற்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் குப்புசாமி கூறுகையில், ‘பல ஆண்டு காலமாக திமுக கட்சியில் இருந்து வருகிறேன். தற்போது, எனக்கு வயதாகி விட்டது. இருப்பினும் கட்சி நிர்வாகம் திமுக முன்னோடி என்கிற அந்தஸ்தை கொடுத்ததோடு பொற்கிழி ரூ.15,000 வழங்கி எங்களை கௌரவித்துள்ளனர். கலைஞரின் பேரன் உதயநிதி கையால் நிதி உதவி பெற்றதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிதி உதவி எனக்கும் என்னைச் சார்ந்த எனது குடும்பத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும். இத்தனை ஆண்டு காலம் நான் திமுக கட்சியின் தொண்டனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்,’’ என்றார்.

லத்தூர் ஒன்றியம் பெரிய வெளிக்காடு கலைஞர் நகரை சேர்ந்த உமா மகேஸ்வரி கூறுகையில், ‘எங்க கிராமத்தில் உடைந்து தையல் இயந்திரத்தை வைத்துக்கொண்டு துணிகளை தைத்து பிழைப்பு நடத்தி வந்தேன். எனக்கு, உதயநிதி ஸ்டாலின் வழங்கிய தையல் எந்திரம் என் குடும்ப வளர்ச்சிக்கு மிகவும் உதவும். தையல் இயந்திரம் வழங்கியதால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், திமுக கட்சிக்கு மிக்க நன்றி எனக் கூறினார். அதே கிராமத்தை சேர்ந்த குருவம்மாள் கூறுகையில், ‘எனக்கு உதயநிதி கரங்களால் வழங்கிய பொற்கிழி சாதாரண மகிழ்ச்சி அல்ல மிகப் பெரிய மகிழ்ச்சி என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் என கூறினார்.

Tags : Udhayanidhi Stalin ,Dhugu ,Welfare Assistance Festival ,Uttramerur ,MLA , Udhayanidhi Stalin who brought victory to DMK at welfare assistance function near Uttramerur: Sundar MLA speech
× RELATED கள்ளக்குறிச்சி சம்பவம்:...