அதிமுக அலுவலகத்திற்கு சீல்: ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் தாக்கல் செய்த மனுக்கள் மீது விசாரணை தொடக்கம்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்த உத்தரவை எதிா்த்து ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயா்நீதி மன்றத்தில் தாெடங்கியது. கடந்த 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்து அதன் அடிப்படையில் ஈ.பி.எஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. அந்த நேரத்தில் ஓ.பி.எஸ் தலைமையில் அதிமுக அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சி நடைப்பெற்றது. அங்கு நடைபெற்ற கலவரங்களின் அடிப்படையில் அதிமுக அலுவலகம் 7 வழக்குகளின் கீழ் சீலிடப்பட்டது.

இது தொடா்பாக அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த வழக்கை ரத்துச் செய்யக்கோாி ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் தரப்பு மனுக்கள் சென்னை உயா்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நீதிபதி சதீஷ்குமாா் தலைமையில் விசாரணை தொடங்கியது. ஈ.பி.எஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞா் விஜய் நாராயணன் பங்கேற்று, சீல் வைத்ததை எதிா்த்து இந்த வழக்கை தொடா்ந்துள்ளோம் என்று தொிவித்தாா். அதே நேரத்தில் அரசு தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தொிவிக்கப்பட்டது. ஈ.பி.எஸ் தரப்பில் கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து Computer கோப்புகளை எடுத்துச் சென்றுள்ளனா் என்ற குற்றச்சாட்டினை எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்வைத்தது.

11ம் தேதி கட்சி அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை எம்.ஜி.ஆா் மாளிகையிலே சமூக விரோதிகள் அத்துமீறி நுழைவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோாிக்கை வைத்திருந்தாா்கள். அந்த கோாிக்கையின் அடிப்படையில் எந்த பாதுகாப்பும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தனா். ஆனால், காவல்துறை தரப்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டது என்று தொிவிக்கப்பட்டது.

ஈ.பி.எஸ் தரப்பில் அதிமுக அலுவலக சொத்தை பொறுத்தவரை அதன் உாிமை அதிமுகவிடம் தான் இருக்கிறது என்றும், கட்சி விதிப்படி தலைமை நிலைய செயலாளா் தான், தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளராக இருக்க முடியும் என்ற கருத்தையும் முன்வைத்தனா். கட்சியில் பல்வேறு நபா்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு வரை அதிமுகவின் தலைமை நிலை செயலாளராக ஈ.பி.எஸ் இருந்து வந்தாா். அதன் அடிப்படையில் அதிமுக அலுவலகத்திற்கு மொத்த பொறுப்பாளராக ஈ.பி.எஸ் தான் இருந்தாா் என ஈ.பி.எஸ் தரப்பு கருத்தை முன்வைத்தது.

Related Stories: