×

விமான நிலையத்தில் பரிசோதனை; குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை குறித்து மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம்.!

டெல்லி: குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை குறித்து மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பை பரிசோதனை செய்யும் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அதில், குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையங்களில் பரிசோதனை செய்ய வேண்டும். குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டால் இணை நோய் உள்ளவர்கள் உடனே சிகிச்சை பெற வேண்டும்.

குரங்கு அம்மை சிகிச்சைக்கு தேவையான சுகாதார கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி தென்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியிருந்த நிலையில், மத்திய அரசு மாநிலங்களுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

Tags : Union Health Department , Inspection at the airport; Union Health Department's letter to states regarding monkey measles prevention measures.
× RELATED சீனாவை அச்சுறுத்தும் நிமோனியா காய்ச்சல்: தயார் நிலையில் இந்தியா..!