நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட சொற்கள் இல்லாமல் சட்டங்களே இயற்ற முடியாது :சு.வெங்கடேசன் எம்.பி. கருத்து

சென்னை : நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட சொற்கள் இல்லாமல் சட்டங்களே இயற்ற முடியாது என்று சு.வெங்கடேசன் எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நெறி பிறழ்ந்த சொற்கள் பட்டியல் குறித்து சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், நாடாளுமன்ற நெறி பிறழ்ந்த வார்த்தைகள் பட்டியல் - 2022 கண்டேன். அறிமுகப் பகுதியில் சொல்லி இருப்பது போன்று அது பேசப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள  சூழலையும் இணைத்தும் வாசித்தேன். பல இடங்களில் திறவு வார்த்தைகளுக்கும், விளக்க குறிப்புகளுக்கும் பெரிய வித்தியாசமும் இல்லை.

Betrayal - துரோகம்

Corruption - ஊழல்

Crocodile tears - முதலைக் கண்ணீர்

Deceived - ஏமாற்று

Derogatory - இழிவான

Drama - நாடகம்

Duplicity - இரட்டைத் தன்மை

Eyewash - கண் துடைப்பு

Fake - போலி

False, Lie - பொய்

Fraud - மோசடி

Gossipers - வதந்திகள்

Greed - பேராசை

Lack of maturity- முதிர்ச்சியின்மை

Lollipops - லாலிபாப்

Mess - குழப்பம்

Misinformation - தவறான தகவல்

Mislead - தவறாக வழி நடத்துவது

Shame - வெட்கம்

இவை எல்லாம் கெட்ட வார்த்தைகள் இல்லையே. இந்த வார்த்தைகள் இல்லாமல் சட்டங்களே இயற்ற முடியாதே. நெறி பிறழ்ந்த வார்த்தைகள் இவை என்றால் நெறி பிறழாமல் இது போன்ற செயல்களை விமர்சிப்பது என்று தனி அகராதி போடுவீர்களா அவைத்தலைவர் அவர்களே! *இந்த பட்டியலை தயாரித்தவர்களை பாராட்டலாம். இந்த அரசின் மீது என்ன விமர்சனங்கள் வரும் என்பதை யோசித்து வார்த்தைகளை தெரிவு செய்திருக்கிறார்கள்.*

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் இது வள்ளுவ வாக்கு. இதைச் சொன்னால் ஏமரா மன்னன் அடுத்த ஆண்டு பட்டியலில் நெறி பிறழ்ந்த சொல் ஆகி விடும். சொற்களைக் கண்டு மக்கள் விரோத அரசுகள் அஞ்சுவது ஒன்றும் புதிதல்ல. என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: