×

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் 1008 கலசாபிஷேகம் துவக்கம்

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கற்பக விநாயகர் பெருமானுக்கு 1008 கலசாபிஷேகம் விழா உலக நலன் வேண்டி ஜூலை 13ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் உலக நன்மை வேண்டி 1008 கலசாபிஷேகமும், நான்கு லட்சம் முறை ஜபம் மந்திரங்களும் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நடைபெறும். இதை முன்னிட்டு நேற்று காலை 10.30 மணியளவில் கோயில் தலைமை குருக்கள் பிச்சை குருக்கள் சோமசுந்தர குருக்கள் தலைமையிலும், கோயில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டனூர் நா.கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி முத்துப்பட்டினம் ஸ்ரீ சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் முன்னிலையிலும் 20க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்று யாக மண்டபத்தில் ஹோமத்தை தொடங்கினர்.

இன்று ஜூலை 14ல் காலையில் சாந்தி ஹோமம், திசா ஹோமும், மாலையில் ப்ரவேசபலி, ரஷோக்ன ஹோமும் நடைபெறும். நாளை ஜூலை காலை நவகிரக ஹோமமும், அஸ்த்ரமந்திர ஜபமும், மாலையில் வாஸ்துசாந்தியும் நடைபெறும். ஜூலை.16ல் காலை 8.30க்கு தீர்த்தஸங்கரஹசணமும், மாலை 4.30க்கு மிருத்ச்சங்கிரஹணமும், அங்குரார்ப்பணமும், இரவு முதற்கால யாகபூஜைகள், முதற்கால பூர்ணாகுதி, தீபாராதனைகள் நடைபெறும். ஜூலை 17ல் காலையில் 2ம் கால யாகபூஜைகள், சதுர்லெஷஜபமும், பகல் 11.30க்கு 2ம்கால பூர்ணாக்குதியும் நடைபெறும். மாலை 6 மணிக்கு 3ம்கால யாகபூஜைகள் சதுர்லெஷ ஜபமும், இரவு 3ம்கால பூர்ணாகுதி தீபாராதனைகளும் நடைபெறும். ஜூலை 18ல் காலை 9 மணிக்கு 4ம் கால யாகபூஜைகள் சதுர்லெஷ ஜபம், பகல் 12க¢கு 4ம்கால பூர்ணாகுதி தீபாராதனைகள் நடைபெறும். மாலையில் 5ம் கால யாகபூஜைகள், சதுர்லெஷஜபமும், இரவு 5ம் கால பூர்ணாகுதி தீபாராதனைகள் நடைபெறும். ஜூலை 19ல் காலை 8.30க்கு 6ம் கால யாக பூஜைகளும், 6ம்கால மகாபூர்ணாகுதியும், தீபாரதனைகளும் நடைபெறும். தொடர்ந்து பகல் 12 மணியளவில் கலசாபிஷேக துவக்கம் அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறும்.



Tags : Karpaka Vinayagar Temple ,Pilliyarpatti , Initiation of 1008 Kalasabhishekam at Karpaka Vinayagar Temple in Pilliyarpatti
× RELATED வெங்கத்தூர் கண்டிகை துலுக்கானத்தம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா