×

25 வயதில்...விமானியான காஷ்மீர் பெண்!

‘‘எனக்கு பல ஊர்களுக்கு பயணம் செய்ய பிடிக்கும். அதனாலேயே நான் பைலட் ஆக வேண்டும் என்று மனதில் சின்ன வயசிலேயே பதிவு செய்திட்டேன்’’ என்று பேச துவங்கினார் அயிஷா என்ற ஆயிஷா அஜீஸ். ‘‘நான் பிறந்தது காஷ்மீரில் என்றாலும், அப்பாவிற்கு மும்பையில் வேலை என்பதால் அங்கேயே செட்டிலாயிட்டோம். குழந்தையாக இருக்கும் போதே வானத்தில் பளிச் பளிச் என்று விளக்குகள் மின்ன விமானங்கள் போவதை ஆச்சரித்துடன் பார்ப்பேன். அதில் பறக்க வேண்டும் என்பது என்னுடை அந்த வயது கனவாக இருந்தது. சின்ன வயதில் என் மனதில் பதிந்த இந்த விஷயம் தான் நான் இப்போது விமானியாக காரணம்’’ என்றவர் தனது 15 வயதிலேயே உரிமம் பெற்ற இளைய மாணவர் விமானி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.

‘‘2011ம் ஆண்டுதான் மாணவ விமானிக்கான உரிமம் பெற்றேன். அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ரஷ்யாவின் சோகோல் விமான நிலையத்தில் எம்ஐஜி -29 ஜெட் விமானத்தை பறக்க பயிற்சி பெற்றேன். அதன் பிறகு, 2017 ஆம் ஆண்டு மும்பாய் பிளையிங் கிளப்பில் (BFC) பயிற்சியினை மேற்கொண்டு விமானியாக பட்டம் பெற்றது மட்டுமில்லாமல் வணிக உரிமமும் பெற்றேன். வேலைக்கான நேரம் அதிகமாக இருந்த போதிலும், எனக்கு அது சவாலாகத் தான் இருந்தது’’ என்று கூறும் ஆயிஷாவின் ரோல் மாடல் விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்சாம்.

‘‘கடந்த சில ஆண்டுகளில் காஷ்மீர் பெண்கள் எல்லாத் துறையிலும் முன்னேறி வருகின்றனர். குறிப்பாக நன்றாக படிக்கிறார்கள். பாதியிலேயே படிப்பை நிறுத்திய காலம் எல்லாம் மாறி ஒவ்வொரு பெண்ணும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளனர். சிலர் ஒரு படி மேலே சென்று முனைவர் பட்டமும் பெறுகிறார்கள் என்று நினைக்கும்போது ரொம்பவே பெருமையாக உள்ளது.

நான் விமானியா வதற்கு முக்கிய காரணம் எனக்கு பயணம் செய்ய பிடிக்கும். பலதரப்பட்ட மக்களை சந்திக்கலாம். எல்லாருக்கும் போல் எட்டு மணி நேர வேலை கிடையாது. கொஞ்சம் சவாலான வேலை. புதிய இடங்கள், வானிலை மாற்றங்கள் என அனைத்தையும் எதிர்கொள்ளவும், சவால்களை சந்திக்கவும் விமானி எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இந்த தொழிலை பொருத்தவரை விமானியின் மனநிலை மிகவும் வலுவாக இருக்க வேண்டும். 200 பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் செல்வது ஒவ்வொரு விமானியின் பொறுப்பு’’ என்றார் ஆயிஷா அஜீஸ்.

Tags : Kashmiri ,
× RELATED தஞ்சையில் அமரன் திரைப்படத்திற்கு...