×

எளாவூர் சோதனை சாவடியில் உள்ள கடைகளுக்கு ஏலம் விடுவதில் கூச்சல் குழப்பம்; பாதுகாப்பு பணியில் போலீசார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஊராட்சி உட்பட்ட  பகுதியில் 137 கோடியே 18லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கணினி மயமாக்கப்பட்ட  எளாவூர் அதிநவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடி உள்ளது. இதில் 10 கடைகளுக்கு ஏலம் விடுவதில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் புறப்பட்டுசென்றனர்.

தமிழக ஆந்திர எல்லைப் பகுதியான கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே ஏழுகிணறு பகுதியில்அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியாக உருவாக்க 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் சாலையிலும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் பகுதியில் எளாவூர் சோதனை சாவடி அமக்கப்பட்டது. இந்தச் சோதனைச் சாவடியில் நவீன எடை மேடைகள், வாகனங்கள் அதிக அளவில் நிற்பதற்கான நிறுத்தங்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள், கிடங்கு வசதிகள், சோதனைச் சாவடி நிலையங்கள், சாலை குறியீட்டு பலகைகள் மற்றும் நவீன மின்சார மற்றும் மின்னணு சாதனங்கள், கணினிமயம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த சோதனைச் சாவடியில் போக்குவரத்துத் துறை, காவல் துறை, வருவாய் துறை,  கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகிய துறைகளுக்கான அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு வெளி மாநிலங்கள் இருந்து வரும் பீகார், ஒடிசா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து  ஓட்டுநர்கள் அவர்களுக்கு தேவையான தங்குமிடம் மற்றும் சிற்றுண்டி வாங்குவதற்கு சுமார் 10 கடைகள் இருபுறமாக அமைக்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் அந்த கடைகள் முறையாக ஏலம் விடப்படாததால் வாகன ஓட்டிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்தனர். இதுகுறித்து வாகன ஓட்டி ஒருவர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு மேற்கண்ட எளாவூர் சோதனைச் சாவடியில் உணவு கூடம், டீ ஸ்டால், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகிறோம் என்றும் மேற்கண்ட கடைகளை திறக்க கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

எளாவூர் சோதனை சாவடி கட்டிடங்கள் முழுவதும் பொதுப்பணித்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ளது .இந்தக் கடைகளை ஏலம் சம்பந்தமாக நேற்று அதிகாரிகள் 10 மணியளவில் ஒன்று கூடி சுமார் 40க்கும் மேற்பட்டோர் ஒரு கடைக்கு 3000 ஆயிரம் ரூபாய் காசோலை வாயிலாக ஏலத்தில் கலந்து கொண்டனர். அப்போது திமுக, அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுக்க முண்டியடித்தனர்.  அப்போது கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அதிரடியாக புறப்பட்டனர்.  பின்பு அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து பத்து கடைகளை பிரித்து  சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடிதம் வாயிலாக கொடுத்தனர். இதனால் இப்பகுதியில்1 மணி பெரும் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு பணியில் ஆரம்பாக்கம் போலீசார் ஈடுபட்டனர்.

Tags : Elavur , Screaming chaos at bidding for shops at Elavoor check post; Police on security duty
× RELATED எளாவூர் சோதனைசாவடியில் 20 கிலோ கஞ்சா...