பூந்தமல்லி அருகே பரபரப்பு: வாலிபரை கொல்ல முயன்ற ரவுடி கைது

பூந்தமல்லி: பூந்தமல்லி  அடுத்த பழஞ்சூர், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் அஜித் (27). தனியார் நிறுவனத்தி மேலாளர். இதே பகுதி, காமராஜர் தெருவைச் சேர்ந்த பிரபல ரவுடி ரூபன் (34). பிரபலரவுடி உறவினர்கள். இருவருக்குமிடையே குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ரூபன், குடிபோதையில் அஜித்திடம் ₹200/- பணம் கேட்டுள்ளார்.

இதையடுத்து அஜித்தும் கேட்ட பணத்தை ரூபனிடம் கொடுத்துள்ளார். பின்னர், ரூபன் திடீரென்று அஜித்தை பின்னால் எட்டி உதைத்துள்ளார். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த அஜித்தை உறவினர்கள் மீட்டு பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரவுடி ரூபனை நேற்று கைது செய்தனர். பின்னர், போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: