முன்னோடிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்குகிறார்; திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும்: மாவட்ட செயலாளர் க.சுந்தர் அழைப்பு

உத்திரமேரூர்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், இன்று உத்திரமேரூரில் நடைபெறும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொது கூட்டத்தில் திமுகவிற்காக மாவட்டத்தில் அரும் பணியாற்றிய மூத்த முன்னோடிகளுக்கு திமுக இளைஞரணி செயலாளர் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கி கௌரவிக்கிறார். அதில், திமுகவினர் திரளாக வந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்.எல்.ஏ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் தெற்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும்  மூத்த முன்னோடிகளுக்கு பெருமை சேர்ப்போம், மூச்சு உள்ளவரை கழகம் காப்போம் நிகழ்ச்சியில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா இன்று உத்திரமேரூர் கலைஞர் திடலில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இதில், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்குகிறார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பா. அப்துல்மாலிக் வரவேற்கிறார். காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ விழாவில் கலந்துகொண்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றுகிறார். உத்திரமேரூர் ஒன்றிய திமுக செயலாளர் கெ.ஞானசேகரன் நன்றி கூறுகிறார்.

இதில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்புமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ கூறியுள்ளார்.

Related Stories: