அனுமந்தண்டலம் கிராம இடைத்தேர்தலில் 6வது வார்டில் திமுக வெற்றி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே நடந்து முடிந்த இடைத்தேர்தலின் அனுமந்ததண்டலம் கிராமத்தில் 6வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றனர். உத்திரமேரூர் அருகே கருவேப்பம்பூண்டி கிராமத்தில்  காலியாக இருந்த 3வது வார்டு உறுப்பினர் மற்றும் அனுமந்தண்டலம் கிராமத்தில் 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கான  இடைத்தேர்தல், கடந்த 9ம் தேதியன்று நடந்தது. இந்த, தேர்தல் முடிந்தபின் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, வாக்கு எண்ணும் பணியானது நேற்று முன்தினம் தேர்தல் அலுவலர் வரதராஜன் முன்னிலையில் நடைப்பெற்றது.

இதில், கருவேப்பம்பூண்டி கிராமத்தில் 3வது வார்ட்டில் போட்டியிட்ட சுயேச்சையாக போட்டியிட்ட (அதிமுக) சசியை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராதிகாவைவிட 110 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதேப்போல், அனுமந்தண்டலம் கிராமத்தில் 6வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஹரிதாஸ் எதிர்த்து போட்டியிட்ட சுயோச்சை (அதிமுக) வெங்கடேசனை விட 14 வாக்குகள் அதிகம் பெற்று, வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு, தேர்தல் அலுவலர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Related Stories: