அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

திருவள்ளூர்: அண்ணா திமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டார். இதனை கொண்டாடும் வகையில் திருவள்ளூரில் மேற்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன் தலைமையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர் இதனைத் தொடர்ந்து பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் நிர்வாகிகள் மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ.நேசன், ஒன்றிய கவுன்சிலர் மூ.நரேஷ்குமார், தர்மேஷ், வளையாபதி, சுந்தரேசன், முத்து, புருஷோத், விஜி, தர்மா, பிரகாஷ்,. ரவி, சீனு, ஜெய் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு நிரந்தரப் பொதுச் செயலாளர் வாழ்க வாழ்க என கோஷமிட்டனர்.

Related Stories: