×

கனமழை காரணமாக வட இந்தியாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு: சுற்றுலா நகரமான மணாலியில் போக்குவரத்து பாதிப்பு

சிம்லா: கனமழை காரணமாக சுற்றுலா நகரமான மணாலியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டள்ளது. இமாச்சல பிரதேசம், குஜராத்,மகாராஸ்டிரா,அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  மழை வெள்ளத்தால் சூழப்பட்டு பல்வேறு நகரங்கள் தத்தளிக்கின்றனர். இமாச்சல பிரதேசத்தில் மணாலி நகரில் நடுவில் ஓடும் பஜோகி நீர் வழித்தடத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நவின சொகுசு பேருந்துகள் சேதமடைந்துள்ளன.

 மணாலி நகரின் மிக முக்கியமான சாலைகள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் போக்குவரத்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அச்சத்தின் காரணமாக நகரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சாலைகளில் கடந்து செல்கின்றனர். மீட்பு பணிகளில் தேசிய பேரீடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.


Tags : north India ,Manali , Heavy rains cause severe flooding in north India: Traffic in tourist city Manali affected
× RELATED மோடி இனி ஊர் ஊராய் போய்… ரோடு ஷோ பண்ணி...